இந்த ஆண்டின் முதல் பாதியில் 14,490 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு – குலசேகரன்

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மொத்தம் 14,490 ஆன்லைன் மோசடி வழக்குகள், 581 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

ஆன்லைன் மோசடி வழக்குகளில் தொலைத்தொடர்பு குற்றங்கள், மின்-நிதி குற்றங்கள், காதல் மோசடிகள், இ-காமர்ஸ் குற்றங்கள் மற்றும் இல்லாத கடன்கள் மற்றும் முதலீடுகள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

2022 இல், பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 25,479 ஆக இருந்தது. 2023 இல், அது 34,495 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இழப்புகள் 2022 இல் 851 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருந்தது. 2023 இல் RM1 பில்லியன் ரிங்கிட்டை தாண்டியது என்று அவர் இன்று திவான் ராக்யாட்டில் நடந்த சிறப்பு சேம்பர் அமர்வின் போது கூறினார்.

மோசடிக்கு பலியாகும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விவியன் வோங் ஷிர் யீ (PH-Sandakan) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். குலசேகரன், மே மாதம் வரை மொத்தம் 7,960 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக நீதிமன்றத்தில் 5,933 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த 3,689 குற்றத் தடுப்புத் திட்டங்களை நடத்தியது” என்று அவர் மேலும் கூறினார். மோசடிகளை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குற்றவாளிகள் மீது மிகவும் திறம்பட வழக்குத் தொடர உதவும் என்றும் குலசேகரன் கூறினார். இந்த முயற்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here