ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆந்திர மாநில வீராங்கனை… தேடிச்சென்று உதவிய ரிலையன்ஸ் அறக்கட்டளை

நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவியால் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கவுள்ளார். திறமை மிக்கவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஆந்திர மாநிலம்விசாகப்பட்டினம் நகரின் கைலாசபுரம் தெருவில் வசிப்பவர் 24 வயதான யர்ராஜி ஜோதி. இவரது அப்பா சூர்ய நாராயணா, அம்மா குமாரி, ஆகியோர் கூலி தொழிலாளியாக உள்ளனர். ஜோதியின் அண்ணன் சுரேஷ் விசாக பட்டின துறைமுகத்தில் அவுட்சோர்ஸிங் ஊழியராக இருந்து வருகிறார்.

ஜோதி தனது குடும்பத்தினருடன் மிகச் சிறிய வீட்டில் வசிக்கிறார். ஆனால் அவரது கனவு என்பது மிகவும் பெரியது. ஜோதி சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில், குறிப்பாக ஓட்ட போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அவரது ஆசிரியர்களும் பள்ளிக் கூடங்களில் ஜோதியை ஊக்கப்படுத்தப்பட்டனர். ஜோதி பத்தாம் வகுப்புக்கு முன்பே பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, ஜோதி தனது விளையாட்டு வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். சில நன்கொடையாளர்களின் உதவியுடன், அவர் ஹைதராபாத்திற்கு சென்று பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது பயிற்சியை தீவிரப்படுத்தினார்.

ஆரம்பத்தில் ஜோதியின் திறமையைக் கண்டு பயிற்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். அதிக பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி அவர் வெற்றி பெற்றார்.

ஐதராபாத் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்து ஜோதி ஓட்டத்தில் அதிக பயிற்சி செய்தார். ஜோதி தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவியோடு, ஊக்கத்துடன் முன்னேறி வருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி ஜோதிக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here