மெக்னம் குலுக்கலில் 4D ஜாக்போட் முதல் பரிசு 18 மில்லியன்; ஆடவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

கோலாலம்பூர்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மெக்னம் குலுக்கலில் செர்டாங்கைச் சேர்ந்த போக்குவரத்து தொழில் புரியும் ஆடவர் ஒருவர் 4டி ஜாக்போட் முதல் பரிசான 18 மில்லியன் ரிங்கிட்டை தட்டிச் சென்றுள்ளார்.

அவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்த அந்த அதிர்ஷ்ட எண்கள் 8217, 1371 ஆகும். இவ்வெண்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களின் கார்ப் பட்டை எண்களாகும்.

இந்த எண்களுடன் இதர எண்களையும் சேர்த்து அவர் சிஸ்டம் பிளை 8இல் பந்தயம் கட்டுவது வழக்கமாகும். காசோலையை பெற வந்தவரிடம் வினவிய போது, அவர் பல வருடங்களாக இவ்வெண்களை பந்தயம் கட்டி வருவதாகவும் தன்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பந்தயம் கட்டி வந்தது இன்று தனக்கு பெரும் பலனை அளித்துள்ளதாகவும் கூறி குதூகலித்தார்.

மேலும் அவர் விவரிக்கையில், இந்த பரிசுப்பணம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் எனவும் இந்த தொகையை அவர் தன் உடன்பிறப்புகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தனது குடும்ப உறுப்பினரின் உடனடி மருத்துவப் பராமரிப்புக்கு இந்த தொகை பெரிதும் உதவும் எனவும் தனது மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய அவனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்தப் பரிசுப்பணத்தை செலவழிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here