பந்திங் பள்ளி கத்திக்குத்துச் சமபவம்: 15 வயது மாணவி மீது நாளை நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

பந்திங், கோலா லங்காட்டில் (Banting, Kuala Langat) உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 வயது மாணவிக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் முறைப்படி குற்றம் சாட்டப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேக நபரான சிறுமி நாளை காலை 8.00 மணியளவில் தெலுக் டத்தோ (Telok Datuk) நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, அந்த மாணவி போலீசாரால் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்குக் காவலில் (Remand) வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவத்தைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையன்று எஸ்.எம்.கே பண்டார் பந்திங் (SMK Bandar Banting) பள்ளியில் இந்த அதிர்ச்சியூட்டும் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது.

“முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தன்று பள்ளியின் வாயில் கதவு (Gate) திறந்திருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவி உள்ளே நுழைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பையினுள் (Bag) கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது” என்று,சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் (Datuk Shazeli Kahar) கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here