அதிகரிக்கும் டிங்கி காய்ச்சல்: ME26இல் 5 இறப்புகள் பதிவு

புத்ராஜெயா: ஜூன் 23 முதல் ஜூன் 29 வரையிலான 26 ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் (ME26) டிங்கி காய்ச்சல் வழக்குகள் 2,788 ஆக உயர்ந்துள்ளன. முந்தைய வாரத்தில் 2,438 வழக்குகள் இருந்தன. இந்த காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால்  ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

2023 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 59,057 டெங்கு வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், ME26 வரை பதிவான டிங்கி வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 75,263 ஆகும். செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) அவர் ஒரு அறிக்கையில் இந்தாண்டு டிங்கி காய்ச்சலால் 60 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 40 இறப்புகள் பதிவாகி இருந்தன.

டாக்டர் முஹம்மது ராட்ஸி, ME26 இல் 78 ஆபத்தான் இடங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரம் 81 இல் இருந்து சற்று குறைந்துள்ளது. சிலாங்கூரில் 61, பேராக்கில் ஐந்து, கெடாவில் நான்கு, நெகிரி செம்பிலானில் மூன்று, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இரண்டு, சரவாக் மற்றும் பினாங்கில் தலா ஒன்று. ME26 இல் மூன்று சிக்குன்குனியா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிக்குன்குனியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here