யோகி பாபுவின் ‘போட்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ உள்ளிட்ட படங்களை எடுத்தவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான ‘கசடதபற’ படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளைப் பெற்றது.

இதையடுத்து, தற்போது ‘போட்’ படத்தை இயக்கியுள்ளார். பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, கெளரி ஜி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here