போட்டியை தாமதப்படுத்திய ரசிகர்கள்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா, கொலம்பியா ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இப்போட்டியை காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, ரசிகர்களை சோதனை செய்ய அதிக நேரம் ஆனது. குடிப்பதற்கு கூட தண்ணீர் தரவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக, மைதானத்திற்கு வெளியே குழந்தைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்யாததால், பார்வையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தது, மைதானத்தின் முன்பக்க கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஆரம்பித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போட்டியை துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் சிலரை, பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here