உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு நிலையாக உள்ளது – பேங்க் நெகாரா ஆளுநர்

கோலாலம்பூர்:

லகளாவிய ரீதியில் பொருளாதார நிலையற்ற தன்மை இருந்தபோதிலும், ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரியான பாதையில் செல்கிறது என்று மத்திய வங்கி ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் கஃபோர் தெரிவித்துள்ளார்.

ரிங்கிட்தின் மதிப்பு உலக சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், மத்திய வங்கி அதற்கு எந்த இலக்குகளையும் நிர்ணயிக்கவில்லை என்றும் , உலக சந்தைக்கு ஏற்ப அது இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முக்கிய குறிக்கோள் என்றும் ” அவர் சொன்னார்.

முதலீடுகள் நாட்டிற்குள் தொடர்ந்து நுழைவதால் மலேசியாவும் வலுவான பொருளாதார வாய்ப்பைக் கொண்டுள்ளது என்றும், பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுவதால், நாம் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும், எனவே நாம் தொடர்ந்து அனைத்து பங்காளிகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், இன்று பிப்ரவரி 17 காலை, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.4265/4350 ஆக உயர்ந்தது, இந்த மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 4.4310/4385 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here