காஸா நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள இஸ்ரேலியப் பிரதமர்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தவிருக்கிறார். காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸுடன் உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் தொடரும் வேளையில் அவர் அங்கு பேசவிருக்கிறார்.

நீண்டகாலமாக இஸ்ரேலை ஆளும் திரு நெட்டன்யாஹு அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் 4 முறை உரையாற்றிய வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார். பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) அங்கு 3 முறை பேசியிருக்கிறார்.

காஸா போர் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் கவலையை ஏற்படுத்தியிருப்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர். காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருப்பது பாதகமாய் அமைந்து விடுமோ என்பது அமெரிக்காவின் கவலை.

ஹமாஸிடம் உள்ள பிணையாளிகளைப் பத்திரமாக மீட்டுவர வேண்டிய நெருக்கடி திரு நெட்டன்யாஹுவுக்கு உள்ளது. சமரசப் பேச்சாளர்கள் உடன்பாட்டை நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) முன்னதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here