நிபோங் தெபால்:
வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
இதில் பக்காத்தான் ஹராப்பான் (PH ) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN ) வேட்பாளர்களுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இன்றைய வேட்புமனு தாக்குதலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே பாரங்களை சமர்ப்பித்தனர்.
இதன் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜொஹாரி ஆரிஃபின் முதல் எண்ணிலும் தேசியக் கூட்டணி வேட்பாளர் ஆரிஃபின் இஸ்மாயில் இரண்டாம் எண்ணிலும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவுவதாக அவர் அறிவித்தார்




















