கிள்ளான்:
மலேசியாவின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு GM Klang இல் சிறப்பு விற்பனை.
மலேசியாவின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் இந்த ஆண்டு மலேசிய தினத்தை முன்னிட்டும் ஜிஎம் கிளாங் மொத்த வியாபார மையம் (GMKlang) வருகையாளர்களுக்காக சிறப்பு விற்பனையை மேற்கொள்கிறது.

purchase with Purchase (PWP)Terpaling Berbaloi 67 எனும் கருப்பொருளில் இந்தச் சிறப்பு விற்பனை இயக்கம் நடத்தப்படுகிறது. 1.8.2024 தொடங்கி 30.9.2024 வரை இரண்டு மாதங்களுக்கு இது நடைபெறும்.
ஜிஎம்கிளாங் மொத்த வியாபார மையத்தில் உள்ள எந்தக் கடைகளிலும் 6 ரிங்கிட் 70 காசு விலையில் சில குறிப்பிட்ட பொருட்களை பொதுமக்கள் இந்த இயக்கத்தின் மூலம் வாங்கிக் கொள்ள முடியும். வேலை செய்யும் நாட்களில் ஜிஎம் கிளாங்கிற்கு வருகை தருவோருக்கு மட்டுமன்றி இன்னும் அதிகமான வருகையாளர்களைக் கவருவதற்காக இந்தப் பிரத்தியேக விற்பனை இயக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று ஜிஎம் கிளாங் தொடர்புத்துறை மூத்த நிர்வாகி நூர்ஸுஹைடா ஓஸ்மான் தெரிவித்தார்.
இந்தச் சிறப்பு விற்பனை இயக்கத்தைத் தொடங்குவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றோம். ஜிஎம் கிளாங் மொத்த வர்த்தக மையத்திற்கு வருகை புரிவோருக்கு நாங்கள் வழங்கும் ஒரு சலுகையாகவும் இது அமைகிறது.
மலேசியாவில் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட பொருட்கள் மிகக் குறைவான விலையான 6 ரிங்கிட் 70 காசுக்கு விற்கப்படுவதாக அவர் சொன்னார். ஜிஎம் கிளாங் மொத்த வியாபார மையத்திற்கு வருகை தரும் விசுவாசமிக்க வருகையாளர்களுக்கு மிகச்சிறந்த முறையில் சிக்கனத்துடன் செலவு செய்யும் ஓர் அனுபவத்தையும் இந்த இயக்கம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இயக்கம் நடைபெறும காலத்தில் 40க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். மின்னியல் மசாஜ் கருவிகள், டம்ப்ளர் செட்டுகள், பானம் அருந்தும் கப்புகள், சமையல் பொருட்களை வைக்கும் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அவற்றுள் அடங்கும். ஜிஎம் கிளாங்கில் உள்ள எந்தக் கடையிலும் ஒரே ரசீதில் குறைந்தபட்சம் 100 ரிங்கிட்டிற்கு வருகையாளர்கள் செலவு செய்திருக்க வேண்டும்.
இந்த சிறப்புச் சலுகையைப் பெறுவதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்ததில் பொருட்களை வாங்குவதற்கு முன் ஜிஎம் கிளாங் வர்த்தக சமூகச் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதையும் வருகையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஒவ்வொரு வாரமும் குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலை பயனீட்டாளர்கள் பார்க்க முடியும். இதன்மூலம் அந்தச் சலுகையை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும். அதோடு ஜிஎம் கிளாங்கில் மேற்கொள்ளப்படும் புதிய விற்பனை இயக்கம் பற்றிய ஆகக் கடைசியான தகவல்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இயக்கம் பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ள அவர்கள் ஜிஎம் கிளாங் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வரலாம். அல்லது முகநூல், இன்ஸ்டாகிராமில் ஜிஎம் கிளாங் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.













