கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு மானிட்டர் பல்லிகள் கடத்தல்

கோலாலம்பூர்:

மலேசியா, கோலாலம்பூரிலிருந்து இந்தியாவிற்கு பயணித்த பயணி ஒருவர் இரண்டு மானிட்டர் பல்லிகளை கடத்தியது குறித்து வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிடன்) இதுவரை எந்த புகாரும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத் துறை அப்பயணியைக் கையும் களவுமாகப் பிடித்ததாக கூறப்படுகிறது.

உளவுத்துறையின் தகவலின் பேரில் சுங்கத்துறை சோதனை மேற்கொண்டதில் பல்வேறு உணவுப் பொருட்களுடன் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மானிட்டர் பல்லிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அதன் வாய்கள் மற்றும் கைகால்கள் ஒன்றாக டேப் செய்யப்பட்டு கருப்பு துணியால் சுற்றப்பட்ட நிலையில் அவை காணப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவோம் என்று பெர்ஹிலித்தான் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here