கலவர பூமியான வங்காளதேசத்தில் இருந்து 123 மலேசியர்கள் பத்திரமாக தாயகம் வந்தடைந்தனர்

சிப்பாங்: வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் கலவர போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த மலேசியர்கள் இன்று பத்திரமாக நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர். 80 மாணவர்கள் உட்பட மொத்தம் 123 மலேசியர்கள் KLIA2 இல் மாலை 5 மணிக்கு வந்தனர். அவர்களின் வருகையை எதிர்பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களும் பிற்பகல் 3 மணி முதல் KLIA2 இன் வருகை மண்டபத்தில் கூடினர். விரைவில் விஸ்மா புத்ரா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று (ஜூலை 22), வங்காளதேசத்தில் “கவலைக்குரிய” போராட்டங்களுக்கு மத்தியில் மலேசியா தனது மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான வங்காளதேச மாணவர்கள் 2018 இல் ரத்து செய்யப்பட்ட அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டை மீண்டும் விதிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பின்னர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து, போராட்டத்தின் உச்சக்கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 20) அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும் வங்காளதேச  அரசு மூடியது. சனிக்கிழமையன்று, வங்காளதேச அரசாங்கம் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை விதித்தது. ஜூலை 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கலவரம் வெடித்ததில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here