மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்: கூலிப்படையை ஏவி மருமகன் கொலை

ஓசூர்: காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். மாப்பிள்ளையிடம் நல்லவர்கள் போல் நடித்து அவரையும் மகளையும் நம்ப வைத்து இந்த குடும்பத்தினர் கழுத்தை அறுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பத்தளப்பள்ளி என்ற இடத்தில் ஆந்திராவை சேர்ந்த ஹசனய்யா என்பவர் ஆண்கள் தங்கும் விடுதியை லீஸுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

அவர் விடுதி தொடங்கிய 4 ஆவது நாளே அவர் தங்கியிருந்த அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தது. அதாவது தனது மாப்பிள்ளையை மாமனாரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசனய்யா. அதே பகுதியை சேர்ந்த பிரம்பீவி என்பவரை ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்தான்.

ஆனாலும் பீரம்பீவி வீட்டில் நன்கு வசதி இருக்கிறது. ஆனால் ஹசனய்யாவின் பொருளாதார வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என மணப்பெண் வீட்டார் கருதியுள்ளனர். இதனால் இந்த காதலை பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். எனினும் மகளின் ஆசைக்காக மருமகனை ஏற்றுக் கொண்டது போல் நடித்த மணப்பெண் வீட்டார், அவரை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹசனய்யாவை கொலை செய்ய பீரம்பீவியின் குடும்பத்தினர் முயற்சித்தும் அது முடியவில்லை என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here