பெண்கள் நாட்டின் கண்கள் என்பவர். உலகளவில் பெண்கள் சாதனைகளை படைத்து வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்து வருகிறோம். நம் தாய் திருநாட்டில் சாதனை பெண்களை அடையாளம் கண்டு கெளரவிக்கும் வகையில் காபி டேபிள் புக் (Coffee Table Book) என்ற புத்தகத்தை வெளியீடு காணவிருக்கிறது.
இந்த புத்தகத்தின் அறிமுகவிழா இன்று தலைநகரில் உள்ள ஒரு தங்குமிட விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா, டாக்டர் புவனேஷ், டாக்டர் ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டு மைவைப்ஸ் தலைவர் டாக்டர் நவமணி ராமசந்திரன் கேட்ட சில கேள்விகளுக்கு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பெண்ணாக தான் பல சவால்களை சந்தித்திருக்கிறேன். என் அம்மா சிறு வயது முதலே என்னை சுதந்திரமாகவும் அதே வேளை கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை முன்னேற்றும் என்று கூறினார். அதை என் வேத வாக்காக எடுத்து கொண்டு என் வாழ்க்கையை தொடங்கினேன். அதே வேளை என் கணவர் எனக்கு மற்றொரு தாயாராக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. நான் பொருளாதாரத் துறையில் முதல் பட்டம் பெற்றேன். பின்னர் மேற்கல்விக்காக எம்பிஏ துறையை தேர்வு செய்தேன்.
என் கணவர் என்னை கல்வி கற்குமாறு கூறிய போது நான் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்றேன். அவர் சம்மதம் தெரிவித்த பின் நான் மேற்கல்வியை பயின்றேன் என்று சிலாங்கூர் மாநில துணை போலீஸ் தலைவர் டத்தோ சசிகலா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் புவனேஷ் போக்குவரத்து சேவைத் துறையில் முதல் இந்தியப் பெண் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் நான் எனது துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதனாம் அத்துறையில் முக்கிய சிலவற்றை தேர்வு செய்து வெற்றி கண்டுள்ளேன் என்றார்.
டாக்டர் ஷாலினி பேசுகையில் கால்நடை, செல்லப் பிராணி மருத்துவராக எனது பணியை தொடங்கினேன். நான் செல்லப்பிராணிகளுக்கான மருந்தகத்தை தொடங்கியபோது பலர் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். பெண்கள் முன்னேற பல தடைகள் இருந்தாலும் சாதனை ஒரு தடையல்ல என்கிறார் அவர்.
Coffee Table Book என்பது என்ன என்று பலர் அறிந்திருப்பர். எங்களுடைய நோக்கம் சாதனை படைத்த மலேசியப் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே. அந்த நோக்கத்தை நாங்கள் அடைய எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகளைன் தெரிவித்து கொள்கிறேன் என்று டாக்டர் மரியா ரூபினா தெரிவித்தார். எங்களுடைய இலக்கை அடைய அனைவரும் வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.









