கோலாலம்பூர்:
நம்முடைய மூளையானது வயதான பிறகும் படிக்க முடியும் எனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நியூரோபிளாஸ்டி சிட்டி என்று அழைக்கப்படும் மூளைச் சக்தி நம்முடைய வாழ்க்கை முழுமையிலும் அறிவாற்றலையும் திறன்களையும் மேம்படுத்தும் சக்தியைத் தருகிறது.
வயதான காலத்தில் கற்றல் வாய்ப்புகளை நிறைய பலன்களைத் தருகின்றன. வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கூர்மையான சிந்தனையுடன் வாழ்வதற்கு துணை புரிகிறது.
50 வயதிற்கு மேலும் கற்கலாம்
வயதானவர்களில் சிறு எண்ணிக்கையிலானோர் இந்த உண்மையைத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மலேசிய பொதுப் பல்கலைக்கழகத்தின் (OUM) 27ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டம் பெற்ற கிட்டத்தட்ட 5,000 பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 20 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

அதேசமயத்தில் 5 விழுக்காட்டினர் 50 வயதினர்களும் அதற்கு மேற்பட்ட வயதினர்களும் ஆவர். ஆக வயதானவர் MBA பட்டம் பெற்ற 90 வயது பெரியவர். பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு என்ன காரணம்? நீண்ட கால லடசியங்களை நிறைவேற்றிக்கொள்வது, புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் போன்றவை வயதானவர்களையும் தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது.
இந்த 90 வயது பெரியவர் சிரம்பானைச் சேர்ந்த முன்னாள் தலைமையாசிரியர் ஆவார். எஞ்சியிருக்கும் காலத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.
வயது வித்தியாசம் பார்க்காத பல்கலைக்கழகம்?
வயதானவர்கள் உலகை செதுக்கும் ஓர் உன்னத பங்கை பல்கலைக்கழகங்கள் ஆற்றுகின்றன. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வயது வித்தியாசம் பார்க்காத ஒரு பல்கலைக்கழகம் உதயமானது. வயதானவர்கள் வாழ்நாள் கல்வியில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்புகளை வழங்கியது.
வயது வித்தியாசம் பார்க்காத பல்கலைக்கழகம் அனைத்து வயதினரையும் ஏற்றுக்கொண்டு உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குகின்றது. இந்த நடைமுறை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாறுபட்டிருக்கலாம். சில பல்கலைக்கழகங்கள் 55 வயதினர் அதற்கு மேலான வயதினர் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. மேலும் சில பல்கலைக்கழகங்கள் வயது முதிர்ந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய ஆராய்ச்சித் திட்டங்களையும் சுகாதார மேம்பாடுகளிலும் கவனம் செலுத்துகின்றன.
OUM–இல் வயது வித்தியாசம் பாராத கற்றல் வாய்ப்பு
வாழ்க்கையில் அனைத்து வயதினரையும் கவர்வதில் OUM கவனம் செலுத்துகிறது. நுழைவுக்கு எளிதான நடைமுறைகள், முறையான கல்விச் சான்றிதழ்கள் வைத்திராத நிலையில் துறை சார்ந்த வேலை அனுபவம் ஒருவருக்கு இப்பல்கலைக்கழகத்தில் பதிந்து படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கிறது. நிதி நெருக்கடி மேலும் இதர காரணங்களுக்காக இளம் வயதில் பட்டம் பெற முடியாதவர்கள், இப்போது அக்கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். பட்டதாரியாக தலைநிமிர்ந்து நடக்கலாம்.

இதற்கான பாதையைத் திறக்கிறது APEL அதாவது Accrecditation of Prior Experiential Learning. சுருங்கச் சொன்னால் வேலை அனுபவம் பெற்றுத் தரும் உயர்கல்வி வாய்ப்பு இது.
மூன்று வகையான APEL உள்ளன. – APEL. A (Access) நுழைவுக்கு வேலை அனுபவம் பரிசீலிக்கப்படுகிறது. APEL. C (Credit) கல்வியை விரைந்து முடிப்பதற்கு கிரேடிட் மாற்றத்திற்கு வகை செய்கிறது. APEL. Q (qualification) பாரம்பரிய பயிற்சிகளுக்குச் செல்லாமல் பட்டம் பெறுவதற்கு வகை செய்கிறது.
அனுமதிக்கு தளர்வு வழங்கப்படுவதுபோல் கற்றலிலும் தளர்வு தரப்படுகிறது. OUM ஒரு டிஜிட்டல் பல்கலைக்கழகம். எனவே, அதன் பெரும்பாலான பாடங்கள் முழுமையாக ஆன்லைன் கற்றலாகவே இருக்கிறது.
வகுப்புகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள், பாடங்கள், பரீட்சைகள் என அனைத்தும் ஆன்லைனில் நிர்வகிக்கப்படுகிறது என்பது இதன் அர்த்தம் ஆகும்.
எனவே, மலேசியாவில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதாவது நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ இருந்தாலும் ஆன்லைனில் எளிதான, சௌகரியமான முறையில் கல்வி கற்கலாம். பல்கலைக்கழக கேம்பஸுக்கு நேரில் வர வேண்டிய அவசியமே இல்லை.
வாழ்நாள் கற்றலின் பயன்கள்
வயதானவர்கள் பட்டம் பெறுவதற்காக பல்கலைக்கழகம் செல்வது என்பது அவர்கள் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பலன் தரவல்லது ஆகும்.
சமூக வாய்ப்புகள், அறிவாற்றல் பெருக்கம், சுய வளர்ச்சி போன்றவை வயதானவர்களுக்கு கிடைக்கும் பலன்கள். அவர்களது உடல் நிலையும் இதில் சம்பந்தப்படுகிறது. ஆரோக்கியமான மனநிலை நோய்களை விரட்டியடிக்கும். இருதய நோய், புற்றுநோய் போன்றவை இவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். ஆரோக்கியமான, மகிழ்ச்சிகராமன வாழ்க்கை நிலை மனநலத்தையும் பேணிக்காக்கிறது.
இளைய தலைமுறையினரோடு வயதானவர்களும் சேர்ந்து படிக்கும்போது தலைமுறை வேறுபாடு களையப்படுகிறது என்பது ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாறாக ஒரே வகுப்பில் படிக்கும்போது அவர்களுக்கிடையிலான ஆக்கப்பூர்வமான அனுபவங்கள் விரிவாகின்றன.
ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உருவாக்கப்படுகிறது
வயது வரம்பு இல்லாத பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி, வயது முதிர்ந்தவர்களுக்கு உள்ளார்த்தமான அனுபவங்களை உறுதி செய்கிறது. கல்விக்ககான வாய்ப்புகள் மரியாதையைத் தேடித் தருகிறது.
OUM வாழ்க்கை கல்விக்கான உங்கள் நுழைவாயில்
OUM 55 வகையான கிஅ அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா முதல் MQA வரையிலான கல்வியை வழங்குகிறது. கல்வி, வணிகம், நிர்வாகம், தொழில்நுட்பம், Applied Screens, Social Sciences, Humanities துறைகள் இந்த உன்னத வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆன்லைன் வழியே பாடங்கள் முழுமையாக கற்றுத்தரப்பட்டாலும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள அதன் 35 கற்றல் மையங்களில் வழிகாட்டிகளும் ஆதரவும் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு : அழைக்க வேண்டியது 03-7801 2000, [email protected] என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். அல்லது www.oum.edu.my அகப்பக்கத்தை பார்க்கலாம்.
























