2 மாத குழந்தையின் கால் உடைந்த வழக்கில் பராமரிப்பாளரின் காவல் நீட்டிப்பு

ஜோகூர் பாரு: துன்புறுத்தலால் கால் உடைந்ததாக சந்தேகிக்கப்படும் 2 மாத பெண் குழந்தை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளரின் காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 36 வயதான பெண் சந்தேக நபருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவு நாளை தொடங்கி புதன்கிழமை வரை நீடிக்கும் என்று தென் ஜோகூர் பாரு  காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ரவூப் செலாமட் தெரிவித்தார்.

சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் முன்னர் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நாளை முதல் புதன்கிழமை வரை விளக்கமறியல் காலத்தை மூன்று நாட்களுக்கு நீட்டிக்க நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளோம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது சுருக்கமாக கூறினார். குழந்தையின் பெற்றோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, இங்குள்ள பண்டார் டத்தோ ஒன்னில் உள்ள பராமரிப்பாளரை போலீஸார் கைது செய்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

போலீஸ் புகார் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக குழந்தையை பராமரிப்பாளரின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற பிறகு, அவரும் அவரது கணவரும் தங்கள் குழந்தைக்கு ஏதோ சரியாக இல்லாததை  கவனித்த பின்னர் குழந்தையின் தாய் சமூக ஊடகங்களில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக டயபர் மாற்றும் போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாகவும், பால் குடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

தம்பதியினர் தங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எக்ஸ்ரே ஸ்கேன் செய்ததில் குழந்தையின் தொடை உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் தாய், காயம் பற்றி விசாரிக்க பராமரிப்பாளரை அழைத்தார். ஆனால் அவர்கள் போலீசில் புகார் செய்வதற்கு முன்பு தான் எந்த எந்த தவறும் செய்யவில்லை என்று குழந்தை பராமரிப்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here