குவா முசாங்: வரவிருக்கும் நெங்கிரி இடைத்தேர்தலில் முகமது ரிஸ்வாடி இஸ்மாயிலை வேட்பாளராக பெரிக்காத்தான் நேஷனல் இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை இன்று மாலை ரெனோக்கில் உள்ள மசூதியில் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் டாவூட் வெளியிட்டார். 41 வயதான முன்னாள் குவா முசாங் பாஸ் இளைஞர் துணைத் தலைவர் பாஸ்-பெர்சத்து சார்பாக போட்டியிடுகிறார்.









