கோலாலம்பூர்:
கடந்த ஜூலை 22 ஆம் தேதி இங்குள்ள சுக்காயிலுள் ஒரு பள்ளியில் மின் சிகரெட் அல்லது வேப்பைப் பயன்படுத்தியதால், படிவம் நான்கு மாணவர் ஒருவர் மயக்கமடைந்தார்.
அவனது சாகக்களின் கூற்றுப்படி, மாணவன் மயக்கமடைந்து தரையில் விழுவதற்கு முன் குறித்த சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்ததாக கூறினர்.
இதுகுறித்து அவர்கள் காலை 10.30 மணியளவில் பள்ளி நிர்வாகத்திடம் அறிவித்தனர் என்றும், உடனே பள்ளி நிர்வாகம் குறித்த மாணவனின் தந்தைக்கு அறிவித்தது, அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் கெமாமன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல்துறையில் புகாரளித்துள்ளதாகவும், போலீசார் விரைவில் இந்த சம்பவம் தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.




















