ஜோகூர் பாரு:
லார்க்கின் அரினா நீச்சல் மையத்தில் நீர் மாசுபாட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஈ-கோலி கிருமி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக மூடப்பட்ட அம்மையம், வரும் ஜனவரி தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
குறித்த நீர் மையத்தில் உள்ள நீச்சல் குளம் மற்றும் டைவிங் குளத்தை உலர்த்தும் பணி இன்று ஆரம்பமானது என்றும், குளத்தின் வடிகட்டுதல் முறை குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது என்றும் மாநில இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுக் குழுத் தலைவர் முகமட் ஹைரி மத் ஷா கூறினார்.
டாமன்சாரா அசெட்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த மையத்தில் உள்ள தண்ணீரின் தரம் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்காகவும், இரண்டு குளங்களில் தரை ஓடுகளை மாற்றுவது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதாகவும், இதற்கு RM1 -3 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.










