மியான்மர் நாட்டவரிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய இரு போலீஸ்காரர்கள்

ஐந்து நாட்களுக்கு முன்பு மியான்மர் நபரிடம் இருந்து 300 ரிங்கிட்டை பணம் பறித்த இரண்டு போலீஸ்காரர்கள் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரினர். Nik Ridzuan Nik Man 39, Najmi Khodri 27, ஆகியோர் வை லின் ஃபியோ 29, அவரை கைது செய்வதாக மிரட்டி  பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 28 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் பாலகோங்கில் உள்ள ஜாலான் தாமிங் சாரி 1 இல் சாலையோரத்தில் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் சட்டம் 384ஆவது பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்ட மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து படிக்கப்பட்ட குற்றச்சாட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் ஒவ்வொரு பிரதிவாதிக்கும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4,000 ரிங்கிட் ஜாமீனை நிர்ணயித்ததோடு  வழக்கினை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூருல் ஹுஸ்னா அம்ரான் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் வபிக் ஹாடி மற்றும் ஃபிக்கா சானுசி ஆகியோர் முறையே நிக் ரிட்சுவான் மற்றும் நஜ்மி சார்பில் ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here