15 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 19 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங்:

15.75 கிலோ மெத்தாம்பெட்டமைன் கடத்தியதாக இன்று (ஆகஸ்ட் 2) இங்குள்ள சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

19 வயதான அபாங் டானி அபாங் அஸ்லான் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி அமாட் ஃபுவாட் ஓத்மான் முன்நிலையில் வாசிக்கப்பட்ட பிறகு, அவர் அதைப் புரிந்து கொண்டதாக தலையசைத்தார். ஆனால், நீதிமன்றத்தில் அவரிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2, லெவல் 2 இல் உள்ள போதைப்பொருள் விசாரணைப் பிரிவு அலுவலகத்திலிருந்து, ஜூலை 19 அன்று இரவு 9.24 மணிக்கு போதைப்பொருள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்தக்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 15 பிரம்பு அடி தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வழக்கை மீண்டும் நவம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here