வயநாடு நிலச்சரிவில் 6 பேர் உயிருடன் மீட்பு: பினராயி பாராட்டு

வயநாடு:

வயநாடு நிலச்சரிவில் இரு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தில் வனத்துறையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாகினர். பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு பகுதியில் வீட்டில் 4 நாட்கள் கழித்து பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை 6 வயது குழந்தை என இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதே போன்று இரு ஆண், இரு பெண் ஆகிய மேலும் 4 நான்கு பேர் என 6 பேர் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது ‛ எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றியது. நமது வனத்துறையினர் 8 மணி நேரம் அயராது செயல்பட்டு விலை மதிப்பில்லாத 6 உயிர்களை மீட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டு. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here