இஸ்கந்தர் புத்ரி, புக்கிட் இண்டாவில் உள்ள பெர்சியாரான் இண்டா சாலை வட்டத்தில் (ரவுண்டானா) கார் மோதியதில் 24 வயது இளைஞர் கொல்லப்பட்டார். அவரது நண்பன் பலத்த காயம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை 1.45 மணியளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாதுகாப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக இஸ்கந்தர் புத்ரி OCPD உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்தார்.
இதன் தாக்கத்தால் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்டவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.தலையில் பலத்த காயம் மற்றும் வலது கை உடைந்தது. அவரது நண்பர் 31 வயது ஆடவருக்கு தலை, கால்கள், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி குமரேசன் தெரிவித்தார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் இஸ்கந்தர் புத்தேரி போக்குவரத்து துறை விசாரணை அலுவலகத்தை 07-5101322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








