14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது : அன்வார்

நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் தற்போது வலுவான நிலையில் உள்ளது என்று பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

சபா பிகேஆரின் மாநாட்டில் பேசிய அவர், நாணயம் குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி கூறினாலும் தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து ரிங்கிட் நேர்மறையான மீட்புப் போக்குகளைக் காட்டியது என்றார்.

ரிங்கிட் ஆசியாவிலேயே வலிமையானது. ஏன்? அது நான் காரணமாக இல்லை. இது அரசாங்கக் கொள்கைகள் மற்றும் எங்கள் ஒருமித்த கருத்து காரணமாகும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் ஒற்றுமை கூட்டணி அரசாங்கத்தின் தலைவருமான அன்வார் கூறினார்.

முதலீடுகள் குவிந்து வருகின்றன. பல தசாப்த கால பதிவுகளைப் பார்த்தால் மத்திய அரசில் இருந்தவர்களுக்குத் தெரியும். இது போன்ற ஒரு பதில் (முதலீட்டாளர்களிடமிருந்து) இல்லை என்று அவர் கூறினார்.  அனைத்துலக அளவில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் போது தனது முயற்சிகள் சபா உள்ளிட்ட மாநிலங்களை முக்கிய முதலீட்டு மையங்களாக, குறிப்பாக சுற்றுலாத்துறையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அன்வார் கூறினார்.

சீனா, ஜப்பான் அல்லது ஜெர்மனி என நான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும்  சபா உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு, சுற்றுலா, புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதை நான் எப்போதும் சுட்டிக்காட்டுகிறேன். நான் மலேசியா மற்றும் சபா இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here