PKPPக்கு சொந்தமான பகுதியில் அத்துமீறி நுழைந்து டுரியான் பழங்களைத் திருடிய மூவர் கைது

குவந்தான்:
பகாங் வேளாண்மை வளர்ச்சி நிறுவனத்தின் (PKPP) மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து டுரியான் பழங்களைத் திருடியதற்காக ஒரு பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்டுள்ளனர்.

ரவூப்பிலுள்ள PKPP Pamah Lebar நிறுவனத்தின் உதவி மேலாளரிடமிருந்து குறித்த அத்துமீறல் தொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்கு தங்களுக்கு அறிக்கை கிடைத்ததாக ரவூப் காவல்துறைத் தலைவர் முகமட் ஷஹரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

40 முதல் 50 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களையும் ஒரு இந்தோனேசிய நாட்டு பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

“இவ்வழக்கு குற்றவியல் அத்துமீறலுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 இன் கீழ் விசாரிக்கப்படுவதற்காக அவர்கள் ரவூப் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருப்பினும், ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்ததும் அனைத்து சந்தேக நபர்களும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here