‘மதராஸி’ இசை வெளியீட்டில் சிவகார்த்திகேயனின் உணர்ச்சிப் பேச்சு: விஜய் பற்றிய கேள்விக்கு பதிலடி!

கோலாலம்பூர்:

நேற்று நடைபெற்ற ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில், சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம், செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சார் கூட நான் நடித்தது எல்லோருக்கும் மகிழ்ச்சி. சிலர், நான் அடுத்த தளபதியாக வரப் பார்க்கிறேன் என்று கிண்டல் செய்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில், ரசிகர்களை யாரும் இலகுவாகப் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு சக்தி. அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here