டாக்கா:
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்படும் என தெரிகிறது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.
பள்ளி, கல்லூரிகள் மூடல்அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.








