பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் ஏராளமான சுற்றுலாப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் மற்றும் வணிக வாகன ஓட்டுநர்கள் பணியில் இருந்தபோது மேற்கொண்ட போதைப்பொருள் சோதனையில், 13 லோரி ஓட்டுநர்களில் ஒருவர் வாகனம் ஓட்டும் போது போதைப்பொருள் பாவித்துள்ளது கண்டறியப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
ஜூலை 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சுற்றுலா மற்றும் பொது சேவை வாகனங்களை உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கையின் போது, 26 சுற்றுலா பேருந்து மற்றும் விரைவு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பாவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, லோக் கருத்து தெரிவித்தார்.
இதேபோல், ஆகஸ்ட் 1 முதல் 5 வரை நடைபெற்ற வணிக வாகன சிறப்பு நடவடிக்கையில் 276 வணிக வாகன ஓட்டுநர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் விளைவாக 21 லோரி ஓட்டுநர்கள் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.