ஜார்ஜ் டவுன்: கடந்த மாதம் தனது தாயின் வீட்டை எரித்து விடுவதாக மிரட்டிய விற்பனையாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. மாஜிஸ்திரேட் சித்தி நூருல் சுஹைலா பஹாரின் 44 வயதான கெல்வின் கன் சூன் மிங், ஜூலை 9 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் பண்டார் பாரு ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு வீட்டில் தனது தாயை மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபாரதத்தை செலுத்த தவறினால் அவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார்.
வழக்கின் உண்மைகளின்படி, குற்றவாளியின் 69 வயதான தாயிடம் ஒரு காரை வாங்குவதற்காக அவரிடம் 5,000 ரிங்கிட் கேட்டபோது அவர் கொடுக்கத் தவறிவிட்டார். இதனால் அவர் தனது வீட்டை எரித்துவிடுவேன் என்று கூறி அவரை மிரட்டினார். குற்றவாளி பின்னர் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் மிரட்டலுக்காக குற்றவியல் சட்டத்தின் 506 ஆவது பிரிவின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது வழக்கறிஞர் Yiew De Xien, இது குற்றவாளியின் முதல் குற்றம் என்பதால் குறைந்தபட்ச தண்டனையை கோரினார். அதே நேரத்தில் துணை அரசு வழக்கறிஞர் Nurul Atikah Asharaf Ali, குற்றவாளிக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதால், குற்றத்திற்கு இணையான தண்டனையை கோரினார்.









