ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட 12 வியட்நாமிய பெண்கள் கைது!

ஈப்போ:

ங்குள்ள கிண்டாவைச் சுற்றி செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒழுகக்கேடான செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 வியட்நாமிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்குத் தொடங்கிய ஐந்து மணி நேர நடவடிக்கையில், பொழுதுபோக்கு மையம், உணவகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றைக் கொண்ட மூன்று வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக மலேசிய குடிவரவுத் துறையின் (JIM) பேராக் மாநில தலைவர் மேர் ஹிஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

சோதனையின் போது, ​​அதிகாரிகள் இருப்பதை அறியாததால், அனைத்து GRO-க்களும் தப்பிக்க முடியவில்லை, மேலும் அங்கு பணிபுரிந்த நான்கு மியன்மார் நாட்டு ஆண்களையும் கைது செய்ததாக அவர் சொன்னார்.

மேலும் “இந்த நடவடிக்கையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் 12 உணவக ஊழியர்களையும் கார் கழுவும் கடையில் ஐந்து தொழிலாளர்களையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து வெளிநாட்டவர்களும் விசாரணை நோக்கங்களுக்காக இங்குள்ள ஈப்போ குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மேர் ஹிஸ்புல்லா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here