கோலாலம்பூர்:
நேற்றிரவு நடைபெற்ற மலேசிய தொழில்துறை விருதுகளில் (MINDA) தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணனுக்கு மடானி சமூக சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (FMBA) இந்த விருதை வழங்கியதாக டத்தோ ரமணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓர் பதிவில் அவர் சொன்னார்.
“எனக்கு இந்த கெளரவத்தை வழங்கியதற்காக டத்தோஸ்ரீ அப்துல் மாலிக் அப்துல்லாவின் தலைமையில் உள்ள FMBA க்கு நன்றி என்று கூறிய அவர், இது எனக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.
“மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இது எனது உறுதிமொழி மற்றும் உறுதியான நிலைப்பாடு என்று அவர் அப்பதிவில் தெரிவித்தார்.









