செலாயாங் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 25 பேர் – தொடரும் மீட்புப்பணி

செலாயாங் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய 25 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, அவர்களுக்கு மதியம் 1.41 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.

செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் செலாயாங்கின் சுங்கை பிசாங்கில் உள்ள இடத்திற்கு வந்தபோது, ​​​​25 பேர் நீர் பெருக்கத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தோம் என்று துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நாள் முழுவதும் கனமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here