அக்டோபர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2025 க்கான விவாத காலம் நீட்டிக்கப்படலாம் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும் என்றும், பட்ஜெட் 2025 தாக்கல் செய்யும் போது இரவு 10.30 மணி வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பட்ஜெட் 2025 பற்றி விவாதிக்க முடிந்த அளவு இடம் தருகிறேன். பட்ஜெட் மீதான விவாதம் இரவு 8 மணிக்கு முடிவடையாவிடில் அதை இரவு 10.30 மணி வரை நீட்டிப்போம். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த விவாதத்தில் பேச முடியும். மேலும் 2025 பட்ஜெட்டில் முழு கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
2025 பட்ஜெட்டில் வளர்ச்சியை உள்ளடக்கிய மிகப் பெரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படலாம் என்றும் ஜோஹாரி நம்புகிறார். கிளந்தான் மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லாவும் கலந்து கொண்டார்.









