கோத்த கினாபாலு: சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளை மறைக்கவும், கடத்தப்பட்ட பொருட்களை விடுவிக்கவும் சுமார் 120,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
கெனிங்காவ் நகரில் சபா எம்ஏசிசி நடத்திய நடவடிக்கையில் 30 வயதுடைய அந்த நபர் மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஒரு ஆதாரம் குறிப்பிடுகிறது. கெனிங்காவைச் சுற்றியுள்ள சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளை மறைப்பதற்கும், அதிகாரிகளின் பிடியில் இருந்த லொறி மற்றும் கடத்தல் பொருட்களை விடுவிக்கவும் சந்தேக நபர் லஞ்சம் கோரியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபா எம்ஏசிசி இயக்குநர் டத்தோ எஸ் கருணாநிதியை தொடர்பு கொண்டபோது கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17(ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் கூறினார்.









