ஷாஆலம்:
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கெஅடிலான், ஜசெகவில் இருந்து இரு ஆட்சிக் குழு உறுப்பினர்களை மாற்றுவதற்கான திட்டத்தை மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைக்கு கெஅடிலான் கட்சியின் இரு வேட்பாளர்கள் உள்ளனர். லெம்பா பந்தாய் சட்டமன்ற உறுப்பினர், போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜசெகவில் தற்போது உள்ள ஆட்சிக் குழு உறுப்பினருக்கு பதிலாக மூத்த, அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.









