வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துகளுக்கு எதிராக நடத்தப்படும் வெறித் தாக்குதல் தற்போது உலக மக்களின் பார்வையை ஈர்த்து வருகிறது.
ஆகக் கடைசியாக டாக்காவில் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் ஹோஸ்டலின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி எறியப்பட்ட காட்சிகள் இதயங்களை பிழிந்தெடுப்பதாக இருந்தன.
ஒவ்வோர் அறை கதவையும் அவர்கள் சூழ்ந்து கொண்டனர். கைகளில் வாள்களையும் கத்திகளையும் வைத்திருந்தனர். சிக்கிய இந்து மாணவர்களை வெட்டி சாய்த்தனர்.
ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற மாணவர்களை கல்லால் அடித்து வீழ்த்தினர்.
சில மாணவர்கள் கூரைகளிலும் சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருந்தனர். கீழே கிளர்ச்சி வங்கதேசிகள் வல்லூறு போன்று வெறியோடு காத்திருந்த காட்சிகளையும் அங்கிருந்து வெளிவரும் காணொளிகளில் காணமுடிகிறது.