கோலாலம்பூர்:
பெர்லிஸ் மந்திரி பெசார் பதவியில் இருந்து ராஜினாமா என பரவிய செய்தி உண்மையில்லை. அது வெறும் அரசியல் குறும்பு என்று முகமட் ஷுக்ரி ரம்லி கூறினார்.
20 மாதங்களாக மந்திரி பெசாராக இருக்கும் தாம் பதவி விலக இருப்பதாக இந்த வதந்திகள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
எனக்கு இது பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் என்னவென்று கருத்து சொல்வது?
வதந்திகளுக்கு பதில் சொல்வது தேவையில்லாத வேலை என்று பெர்லிஸ் மாநில பாஸ் தலைவருமான ஷுக்ரி கூறினார்.