மஹ்கோத்தா இடைத்தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும்

ஜோகூர் மஹ்கோத்தா மாநிலத் தொகுதிக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹருன், வேட்பாளர்களுக்கான வேட்புமனுத் தினம் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்கூட்டியே வாக்களிப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதான சட்டமன்ற உறுப்பினர் ஷரிபா அஜிசா சையத் ஜைன் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இறந்ததை அடுத்து மஹ்கோத்தாவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஜோகூர் தேர்தலில் அமானாவின் தக்கியுதீன் செமானை விட 5,166 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஷரிபா வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here