வர்த்தக குற்றச்செயல்கள்; 1.5 பில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் வர்த்தக குற்றச்செயல்கள் வழி இவ்வாண்டில் இதுவரை 1.5 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றபுலன் விசாரணை இலாகா இயக்குனர் கமிஷனர் டத்தோஸ்ரீ ரம்லி முஹமட் யூசுப் கூறினார்.

2024, ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை 18 ஆயிரத்து 205 வர்த்தக குற்ற செயல்கள் புலன்விசாரணை செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

வளர்ச்சி அடைந்த தொழில்நுட்ப சகாப்தத்தில் வர்த்தக குற்ற செயல்களை தடுப்பது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதிக்குள் வர்த்தக குற்றசெயல்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவர் கோடிகாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here