ஜோகூர் பாரு, லார்கினில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடத்திய சோதனையின் போது 2.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்ததோடு 44 வயது நபரை கைது செய்தனர். போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் (NCID) ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை சோதனை நடத்தப்பட்டதாக தென் ஜோகூர் பாரு OCPD உதவி ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
ஒரு காருக்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரின் வாகனத்தை சோதனை செய்ததில், போதைப்பொருள் என நம்பப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு இரட்டை அடுக்கு மாடி கடைக்கு எங்களை அழைத்து சென்றார். அங்கும் காரில் இருந்தது போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்ரப்பட்டன. அவைகளின் மொத்த மதிப்பு 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக தென் ஜோகூர் பாரு காவல்துறை தலைமையகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.