கோலாலம்பூர்:
பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் நோக்கத்தில் அரசாங்கம் “பெண்களுக்கு மட்டும்” கோச்சுகளை கொம்யூட்டர் மின்சார ரயிலில் அறிமுகம் செய்திருக்கிறது.
இதில் ஆண்களுக்கு அறவே இடம் இல்லை. எச்சரிக்கையை பொருட்படுத்தாது சில ஆண்கள் அத்துமீறி அங்கு நுழைவது வாடிக்கையாக இருக்கிறது.
என்ன செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் யோசித்தார்.
அத்துமீறி பெண்களுக்கு எரிச்சலூட்டும் ஆண்களுக்கு அபராதம் விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெண்கள் கோச்சில் நுழையும் ஆண்கள் அபராதம் செலுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.