வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 835 குடும்பங்களுக்கு பந்துவான் வாங் இஹ்சான் (BWI) அரசு நிதி உதவியின் முதல் தொகுதி பண உதவி வழங்கப்பட்டுள்ளதாக லிங் தியான் சூன் கூறுகிறார்.
சமீபத்தில் பைத்துல் இஸ்லாஹ், SMK டத்தோ சேத், SK தாமான் ஸ்ரீ கோத்தா, செக்கோலா அகமா ஸ்ரீ கோத்தா மற்றும் யோங் பெங் உயர்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 397 குடும்பங்களுக்கு RM1,000 பண உதவி வழங்கப்பட்டதாக ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவரான லிங் கூறினார்.
அத்தோடு “SJKC யோங் பெங் 1, SJKC லாம் லீ மற்றும் SK ஸ்ரீ பெர்தாம் ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்த மேலும் 438 குடும்பங்கள் யோங் பெங் மாவட்ட கவுன்சில் மூலம் இந்த நிதி உதவியைப் பெறுவார்கள்.
“பாதிக்கப்பட்டவர்களின் நலனில் மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பண உதவியை விநியோகிக்க அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது” என்று யோங் பெங் சட்டமன்ற உறுப்பினருமான லிங் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.










