ஐ – போன் வாங்க டுரியான் வியாபாரத்தில் தாய்க்கு உதவும் மகள்

கோலாலம்பூர்:

‘உனக்கு ஐ – போன் வேண்டுமா? டுரியான் வியாபாரத்தில் எனக்கு உதவி செய். அதற்கு நான் தரும் சம்பளத்தை சேர்த்து வைத்து வாங்கிக்கொள்,’ என்று தாயார் சொன்னதும் மகளுக்கு ஒரே கொண்டாட்டம்.

இதை கேள்விப்பட்ட இணைய வாசிகள் தாயையும் மகளையும் பாராட்டி வரும் அதேவேளையில் அக்கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.

பணம் மரத்தில் காய்ப்பது இல்லை. உழைத்தால் தான் பணம் சேரும் என்பதை தன் மகளுக்கு சொல்லி வளர்க்கிறார் தாய்.

தன் மகள் டாமியா முரண்டு பிடிக்காமல் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு கடைக்கு வந்து டுரியான் வியாபாரத்தில் உதவுவதாக பெருமையுடன் தாய் லியானா சான் தெரிவித்தார்.

உழைப்பின் உன்னதத்தை மகள் டாமியா உணர வேண்டும். அப்போது தான் சம்பாதித்து தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுவாள் என்று அந்தத் தாய் கூறுவதை இணைய வாசிகள் ஆமோதிக்கின்றனர்.

தன்னுடைய சம்பாதியத்தில் புதிய ஐ – போன் வாங்கும் வரை உடைந்து போன பழைய ஐ – போன் தான் டாமியாவின் உற்ற துணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here