கடந்த 2022ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகிறது. நேற்று 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த நடிகருக்கான விருது ரிஷப் ஷெட்டிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது காந்தாராவுக்கும் வழங்கப்பட்டன.