கோலாலம்பூர்:
சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள இரண்டு உணவகங்களில் மனித கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் 14 வெளிநாட்டினரை குடிநுழைவுத் துறை நேற்று கைது செய்தது.
இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கட்டாய வேலை செய்துவந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுக்கு குறைந்த வெளிநாட்டு சிறுவன் ஒருவனையும் குடிநுழைவு அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று, குடிநுழைவுத் துறை (செயல்பாடுகள்) துணை இயக்குநர் ஜெனரல் ஜாஃப்ரி எம்போக் தாஹா கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர், இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 10 ஆண்களும் நான்கு பெண்களும்அடங்குவதாக அவர் சொன்னார்.
மேலும் அவர்களை பணியமர்த்தியதாக நம்பப்படும் இரண்டு உள்ளூர் முதலாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஃப்ரி மேலும் கூறினார்.
ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (ATIPSOM) சட்டம் 2007 (சட்டம் 670), குறிப்பாக குழந்தைகளை சுரண்டுவதற்காக கடத்தல் பிரிவு 14 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.









