நீரிழிவு, சக்கரை சம்பந்தப்பட்ட நோய் விவகாரங்களுக்காக ஆண்டுக்கு 42 மில்லியன் ரிங்கிட் செலவு!

கோலாலம்பூர்:

நீரிழிவு, சக்கரை சம்பந்தப்பட்ட நோய் விவாரங்களுக்காக பெர்கேசோ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 42 மில்லியன் ரிங்கிட் வரையில் செலவிடுகின்றது.
அதில் பெரும்பகுதி தொகை இந்த நோய்களுக்கு எதிரான சிகிச்சைக, இழப்பீடுகளுக்கு செலவிடப்படுகின்றது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அதிலும் பெர்கேசோ கடந்த ஆண்டு சீனிக்கு எதிரான ( Anti Gula)
பிரச்சாரத்தை தொடங்கியது.

மேலும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றது.

அரசாங்கம் தொழிலாளர்கள் காயமுற்ற அல்லது நோய்வாய்பட்ட பிறகு மட்டும் செயல்படவில்லை. மாறாக தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் மேற்கொள்கிறது.

மேலும் விபத்து நிகழ்ந்த பிறகு மட்டும் நாம் (அரசாங்கம்) வரவில்லை. பணியிடங்களில் விபத்துகள், நோய் சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்னதாகவே அவற்றை தடுக்க முனைகிறோம்
என்று இன்று கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 அனைத்துலக சமூக பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர்
விவரித்தார்.

இந்த கருத்தரங்கில் பெர்கேசோ தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான், இந்திய தொழிலாளர் அமைச்சர் மன்சூக் மண்டாவியா, பாராகுவே தொழில்- சமூக பாதுகாப்பு அமைச்சர் மோனிக்கா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here