கோம்பாக்: எட்டு வயது மகளின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் துன்புறுத்தல் தொடர்பில் திருமணமான தம்பதியி கைது செய்யப்பட்டுள்ளனர். கோம்பாக் OCPD உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறுகையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) பிற்பகல் 3.27 மணியளவில் ரவாங் பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாதிக்கப்பட்டவரின் மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
பாதிக்கப்பட்டவரின் முகம் மற்றும் உதடுகள், தொடை, கன்னம் மற்றும் முழங்கால்களில் காயங்கள் இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இந்த வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள அவர்களது குடியிருப்பில் 29 வயது இளைஞரையும் அவரது 28 வயது மனைவியையும் போலீசார் தடுத்து வைத்ததாக ஏசிபி நூர் அரிஃபின் தெரிவித்தார். சந்தேக நபர் காவலராக பணிபுரிகிறார். மனைவி ஐஸ்கிரீம் தயாரிப்பாளராக உள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் ஆகஸ்ட் 24 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
தகவல் தெரிந்தவர்கள் மூத்த விசாரணை அதிகாரி முகமட் ஹமிசான் முகமட் யூனுஸை 013-8348384 என்ற எண்ணில் அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03- 61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.