ஓட்டுநருடனான தவறான புரிதல் காரணமாக வாடகை காரில் இருந்து குதித்த இளம்பெண்

ஜோகூர் பாருவில்  ஓட்டுநருடன் ஏற்பட்ட தவறான புரிதலால், ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த இளம்பெண் லேசான காயம் அடைந்தார். வட ஜோகூர் பாரு  OCPD உதவி ஆணையர் பல்வீர் சிங் கூறுகையில், 54 வயதான ஆண் ஓட்டுநர் 17 வயது சிறுமியை ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் ஒரு குடியிருப்பு பகுதியில் அவரை ஏற்றிக் கொண்டார். அந்த இளம்பெண் அவர் வேலைக்காக தம்போயில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

இருப்பினும், வழியில் சில சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக ஓட்டுநர் தனது பாதையை மாற்ற வேண்டியிருந்தது. அவர் வேறு வழியில் செல்வதை இளம்பெண் கவனித்தபோது ​​ஓடும் காரில் இருந்து குதிக்க முடிவு செய்தாள். ஏசிபி பல்வீர் கூறுகையில், ஓட்டுநர் தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி சிறுமிக்கு உதவ முயன்றதாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் ஒரு வழிப்போக்கர் அந்த இளம்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். அவளது முழங்கால்கள், கைகள், முதுகில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு ஓட்டுநர் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் இஹெலிங் நிறுவனத்திற்கும் தெரிவித்தார். அந்த இளம்பெண்னும் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

ஏசிபி பல்வீர் மேலும் கூறுகையில், இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறு எதுவும் இல்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டது. மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தால், பயணிகளிடன் தெரிவிக்குமாறு அவர் இஹெலிங் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்டப்படும் அதே வேளையில், தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள்  ஓட்டுநர்களிடம் விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு என்றும் அவர் கூறினார்.

அதற்குப் பிறகும் நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், உங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை இருப்பதால், உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்வது நல்லது என்று அவர் மேலும் கூறினார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில், சிறுமியை கடத்த முயன்றதாக ஓட்டுநர் மீது புகார் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here