கோலாலம்பூர்:
மலேசிய குடிநுழைவு இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக ஒரு கடை வீட்டின் ஜன்னலுக்கு பின்னால் ஒளிந்திருந்த ஒரு சட்டவிரோத அந்நிய தொழிலாளி இறுதியில் சிக்கினான்.
ஜோகூர் பாரு மாநகரில் இன்று பின்னிரவு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் 35 சட்டவிரோத அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவு இலாகா இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் கூறினார்.
இவர்களில் 15 பேர் ஆண்கள், 14 பெண்கள் என 29 இந்தோனேசியர்கள் என்ற அவர், இந்தியாவை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், ஒரு மியான்மர் ஆண், ஒரு பாக்கிஸ்தானிய ஆண் பிடிபட்டனர் என்றார்.
இவர்கள் அனைவரும் 17 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








